கடந்த 2018ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 கொலை, 91 பலாத்காரம் : தேசிய குற்ற ஆவண பிரிவு தகவல்

புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 கொலைகள், 91 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண பிரிவு சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண பிரிவு, கடந்த 2018ம் ஆம் ஆண்டில் நடந்த குற்ற விவரங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் குற்றங்கள் 50 லட்சத்து 77 ஆயிரத்து 634. இவற்றில் இந்திய தண்டனை சட்டப்படியிலான குற்றங்கள் 31 லட்சத்து 32 ஆயிரத்து 954.  சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 19 லட்சத்து 41 ஆயிரத்து 680. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு மொத்தம் 50 லட்சத்து 7 ஆயிரத்து 44 குற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன.

* கொலை குற்றங்களின் எண்ணிக்கை 29,017 (சராசரியாக ஒரு நாளுக்கு 80 கொலைகள்). கடந்த 2017ம் ஆண்டை விட இது 1.3 சதவீதம் அதிகம்.

* கடத்தல் வழக்குகள் தொடர்பாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 734 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2017-ம் ஆண்டை விட 10.3%அதிகம்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3 லட்சத்து 78 ஆயிரத்து 277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பலாத்கார குற்றங்கள் மட்டும் 33 ஆயிரத்து 356 (அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 91) இது கடந்த 2017, 2016ம் ஆண்டுகளை விட அதிகம்.

* ஒட்டு மொத்தமாக கடந்த 2017ம் ஆண்டை விட 2018ம் ஆண்டு குற்றங்கள் 1.3% அதிகரித்துள்ளன.

Related Stories: