எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்; பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை...மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

டெல்லி: ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, இரு நாடுகளும் மாறமாறி தாக்குதல் நடத்தி வருகிறாதால், எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து தினமும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. ஈரான் அருகே இருக்கும் ஹோர்மூஸ் ஜலசந்திதான் உலகில் 40% எண்ணெய்

வர்த்தகம் நடக்கும் இடம். இதற்கு அருகேதான் இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் அங்கே தற்போது எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் ரூ.78.77-க்கும், டீசல் ரூ.72.85-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது 80 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவுக்கு பெட்ரோலியம் வழங்கும் முக்கிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

Related Stories: