போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

சென்னை: போகி பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போகி பண்டிகையின் போது மக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார தொடக்க விழா நடைபெற்றது. அப்போது  விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடியசைத்து அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மாசு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை எரிப்பவர்களை கண்டறிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர் கண்காணிப்பில்  ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories: