ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்களை உணவில் விஷம் கலந்து கொலை செய்ய பயங்கரவாதிகள் சதி

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்களை உணவு மற்றும் குடிநீரில் விஷத்தை கலந்து கொலை செய்ய பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அந்த நாட்டு ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு மட்டும், ஜம்மு -காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதிகள், சர்வதேச எல்லைப் பகுதியில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 1,400 முறைக்கும் மேல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, பயங்கரவாத அச்சுறுத்தல், சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்புப்படை வீரர்களை அவர்கள் சாப்பிடும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் விஷத்தை கலந்து கொள்ள பயங்கரவாதிகள் சதித்திட்டம் திட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தங்கியிருக்கும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: