பாஜ கோழைத்தனம் பிரியங்கா ஆவேசம்

புதுடெல்லி: `பீம் சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை சிறையில் வைத்திருப்பது பாஜ.வின் கோழைத்தனத்தை காட்டுகிறது,’ என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய பீம்சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருடைய உடல்நிலை மோசமானதால், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கடந்த சனிக்கிழமை பீம்சேனா வலியுறுத்தியது. ஆனால், அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அதிருப்தியாளர்கள், போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடும் அரசின் கொள்கை, அதன் கோழைத்தனத்தை காட்டுகிறது. அவர்களின் செயல்பாடுகளில் சிறிதளவும் மனிதத்தன்மை இல்லாதது வெட்கக்கேடானது. சந்திரசேகர் ஆசாத்தை சிறையில் வைப்பதற்கு எந்தவொரு அடிப்படை காரணமும் இல்லை. சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: