டேக்வாண்டோ போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை

காஞ்சிபுரம்: பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் தேசிய, சர்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் காஞ்சிபுரம் ஸ்மார்ட் கேம்ஸ் அகாடமியைச் சேர்ந்த 52 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.போட்டியில் 30 தங்கம், 20 வெள்ளி, 17 வெண்கலம் என 67 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரம் மாவட்ட வீரர், வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக பதக்கப் பட்டியலில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை  பயிற்சியாளர்கள் செந்தாமரை கண்ணன், யுவராணி, பிரகாஷ், வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: