புதுக்கோட்டை அரிமளம் ஊராட்சி ஒன்றிய சுயேச்சை உறுப்பினர் திமுகவில் இணைந்தார்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய 13வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர் எஸ்.கணேசன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திந்து திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியின் போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தேர்தல் பணிப் பொறுப்பாளர் இ.கருணாநிதி எம்எல்ஏ, பரணி இ.ஏ.கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் த.மணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: