வாடிகன் சிட்டி: புத்தாண்டு வாழ்த்து கூறியபோது கையை பிடித்து இழுத்த பெண்ணின் கையை தட்டியதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதன்பின், புனித பீட்டர் சதுக்கத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். குழந்தைகளை தொட்டு ஆசிர்வதித்தார். சிலர் போப்பிடம் கை குலுக்கினர். அப்போது, பெண் ஒருவர் போப்பின் கையை இறுக பற்றி இழுத்தார். இதனால் நிலை தடுமாறிய 83 வயது போப், சற்று கோபம் அடைந்தார். அந்த பெண்ணின் கையை இருமுறை தட்டி, தனது கையை விடுவித்து சென்றார். மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய போப், கூட்டத்தில் இருந்து சற்று விலகியே சென்று ஆசி வழங்கினார். குழந்தைகளை மட்டும் தொட்டு ஆசிர்வதித்தார்.