ஐசிசி யு-19 உலக கோப்பை பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா விலகல்

கராச்சி: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து 16 வயது இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார். ஐசிசி இளைஞர் உலக கோப்பை என அழைக்கப்படும் யு-19 தொடர், தென் ஆப்ரிக்காவில் ஜனவரி 17ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா (16 வயது) சேர்க்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் சீனியர் அணியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான நசீம் ஷா, சமீபத்தில் இலங்கையுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இந்த நிலையில், சீனியர் அணியில் அவர் திறமையை நிரூபித்துவிட்டதால், யு-19 உலக கோப்பை தொடருக்கான ஜூனியர் அணியில் இருந்து நசீம் ஷா விலக்கிக் கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட உள்ள தொடரில் நசீம் ஷா இடம் பெறுவது உறுதி என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: