தேசிய ரோடு சைக்கிளிங் போட்டி: கண்டரமாணிக்கம் மாணவி சாதனை

காரைக்குடி: தேசிய அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில்  கண்டரமாணிக்கம் சேது ஐ ராணி பள்ளி மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். காரைக்குடி அருகே உள்ள கண்டரமாணிக்கம் சேது ஐ ராணி பள்ளி மாணவி குணமணி. இவர் ரோடு சைக்கிளிங் போட்டியில் மாநில அளவிலான போட்டியில் கடந்த 5 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறார். இதுவரை 10க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார்.

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்றனர். 17வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி குணமணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து இவர், கவுகாத்தியில் வரும் 11 முதல் 16 வரை நடக்கவுள்ள தேசிய போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவியை சேது பாஸ்கரா கல்வி குழும தலைவர் சேதுகுமணன், தாளாளர் சேது ஐ ராணி அம்மாள், பொருளாளர் திருநாவுக்கரசு, முதல்வர் ரோசாரியோபிரின்ஸ், பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: