அடிலெய்டு: பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 3 ரன் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணி த்ரில் வெற்றி பெற்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. உஸ்மான் கவாஜா 63 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் கால்லம் பெர்குசன் 73 ரன் (46 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.