ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை டாப் 10ல் குவின்டன் டி காக்: புஜாரா பின்னடைவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், தென் ஆப்ரிக்க அணி விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் வெற்றிகளைக் குவித்த இந்திய அணி இதுவரை 360 புள்ளிகளைக் குவித்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அணிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா 256 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி 7 போட்டியில் விளையாடி அனைத்திலும் வென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 9 போட்டியில் 6 வெற்றி, 1 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 80 புள்ளிகளுடன் 3வது, 4வது இடங்களில் உள்ளன. ஐசிசி நேற்று வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (911) 2வது இடத்திலும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (822) 3வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (791) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிராக செஞ்சுரியனில் நடந்த டெஸ்டில் 95 ரன் விளாசிய டி காக் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (902) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 6வது இடத்திலும், ஆர்.அஷ்வின், ஷமி 9வது மற்றும் 10வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் டாப் 10

ரேங்க்    அணி    புள்ளி

1    இந்தியா    120

2    நியூசிலாந்து    112

3    தென் ஆப்ரிக்கா    102

4    இங்கிலாந்து    102

5    ஆஸ்திரேலியா    102

6    இலங்கை    92

7    பாகிஸ்தான்    85

8    வெஸ்ட் இண்டீஸ்    81

9    வங்கதேசம்    60

10    ஆப்கானிஸ்தான்    49

பேட்டிங் டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி

1    விராத் கோஹ்லி (இந்தியா)    928

2    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    911

3    கேன் வில்லியம்சன் (நியூசி.)    822

4    மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.)    805

5    செதேஷ்வர் புஜாரா (இந்தியா)    791

6    பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)    767

7    அஜிங்க்யா ரகானே (இந்தியா)    759

7    டேவிட் வார்னர் (ஆஸி.)    759

9    ஜோ ரூட் (இங்கிலாந்து)    754

10    குவின்டன் டி காக் (தெ.ஆப்.)    712

பந்துவீச்சு டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி

1    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    902

2    நீல் வேக்னர் (நியூசி.)    859

3    காகிசோ ரபாடா (தென் ஆப்.)    832

4    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    830

5    வெர்னான் பிலேண்டர் (தென் ஆப்.)    800

6    ஜஸ்பிரித் பூம்ரா (இந்தியா)    794

7    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    790

8    ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.)    777

9    ஆர்.அஷ்வின் (இந்தியா)    772

10    முகமது ஷமி (இந்தியா)    771

ஆல் ரவுண்டர் டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி

1    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    473

2    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)    406

3    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)    377

4    வெர்னான் பிலேண்டர் (தெ.ஆப்.)    348

5    ஆர்.அஷ்வின் (இந்தியா)    308

6    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    297

7    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    272

8    கிராண்ட்ஹோம் (நியூசிலாந்து)    239

9    ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்)    238

10    கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)    223

Related Stories: