வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா கம்மின்ஸ் வேகத்தில் நியூசிலாந்து காலி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா வீரர் பாட்  கம்மின்ஸ் வேகத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 148 ரன்னில் ஆட்டமிழந்தது. மெல்பர்னில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திேரேலியா 467 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தது.  முதல் இன்னிங்சை தடுமாற்றத்துடன் தொடங்கிய நியூசி 3வது நாளும் தடுமாற்றத்தில் இருந்து மீளவில்லை.  ஆஸி பந்து வீச்சாளர்கள் வேகத்தை சமாளிக்க முடியாமல் நியூசி வீரர்கள் பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினர். களத்தில்  இருந்த லாதம் மட்டும் பொறுமையாக பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்தார்.  அவரும் அடுத்த ரன் சேர்ப்பதற்குள் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.  அதனால் நியூசி 54.5ஓவருக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன் மட்டுமே  எடுத்தது.

வேகப்பந்து வீச்சில் நியூசிலாந்தை மிரட்டிய பாட் கம்மின்ஸ் 5,  ஜேம்ஸ் பாட்டின்சன் 3, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  முதல் இன்னிங்சில் 319 ரன் முன்னிலை பெற்றிருந்த  ஆஸி 2வது இன்னிங்சை  தொடங்கியது. தொடக்க  ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 38, ஜோ பர்ன்ஸ் 35, மார்னஸ் லாபஸ்சேஞ்ச் 19, ஸ்டீவன் ஸ்மித் 7 ரன் எடுத்தனர். அதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி 2வது இன்னிங்சில் 45ஓவருக்கு 4 விக்கெட்களை இழந்து 137 ரன் எடுத்தது. மாத்யூ வாட் 15, டிராவிஸ் ெஹட் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசியின் நெயில் வாக்னர் 2, மிட்செல்  சான்டனர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போது ஆஸி 456 ரன் முன்னிலையில் உள்ளது.  மேலும் 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன. எனவே 4வது நாளான இன்று 500 ரன்னை கடந்ததும் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்யலாம். நியூசியின் நிலைமைக்கு 500ரன் சிரமமான  இலக்குதான். எனவே முதல் டெஸ்ட்டில்  நியூசியை வீழ்த்திய ஆஸி 2வது டெஸ்டிலும் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளது.

Related Stories: