பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவை, துடியலூரை அடுத்த பன்னிமடையில், கடந்த மார்ச் மாதத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும் வழங்கிட வேண்டும்.

இந்த கொடூரச் சம்பவத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டி.என்.ஏ. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மேல் விசாரணை நடத்திட வேண்டும். கோவை, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

Related Stories: