இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக சார்பில் 15ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு காசிமேடு கடற்கரையில், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அதிமுகவினர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்கு தேவையான நிதி பெற்று மக்களுக்கு அதிமுக சேவையாற்றி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எனக்குத்தான் சொந்தம் என சசிகலா கூறியுள்ளார்.  இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதுபற்றி எந்த கருத்தும் கூறமுடியாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதே எங்களது நோக்கம். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: