சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்; உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிரிவு

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த ஆதித்ய தாக்கரேவுக்கு இனி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 24-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பாஜக-வுக்கும் சிவசேனைக்கும் இடையில் நடந்த அரசியல் மோதல், பிறகு பாஜக திடீர் பதவியேற்பு, பதவி விலகல் ஆகிய பரபரப்புகளால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைய ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது. இந்நிலையில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தது.

சச்சின் பாதுகாப்பில் மாற்றம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு இனி எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாது என்று மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories: