கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

குயின்ஸ்லேண்ட்: பிரிஸ்பேன் ஹீட் அணியுடனான பிக் பாஷ் டி20 லீக் ஆட்டத்தில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன் வித்தியாசத்தில் வென்றது. கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்துவீசியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. 5வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 83 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். ஹேண்ட்ஸ்கோம்ப் 20, கார்ட்ரைட் 18, ஸ்டாய்னிஸ் 16, பென் டங்க் 11 ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. தொடக்க வீரர் டாம் பான்ட்டன் 64 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), மேட் ரென்ஷா 39, பென் கட்டிங் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டார்ஸ் பந்துவீச்சில் ஸம்பா 3, ஹாரிஸ் ராவுப், டேனியல் வொரல் தலா 2, லாமிகேன் 1 விக்கெட் வீழ்த்தினர். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: