தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள குப்பம் பகுதியில் அமைந்துள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் சார்பு துணைவேந்தராக பணியாற்றி வந்தார். இந்த பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவராக பதவி வகித்தார். இவர், 22 ஆராய்ச்சி கட்டுரைகளையும் நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். இரண்டு மாநில எல்லையில் வசிக்கும் மக்களின் மொழித்திறன் குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்து ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 3 ஆண்டுகளுக்கு நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி தஞ்சை பல்கலை கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டதாக தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் பல்கலை கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியனை நியமிக்க உரிய கல்வி தகுதி இல்லை என்று புகார் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று வந்தது. அப்போது தஞ்சை தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Related Stories: