ரயில்வே சொத்தை நாசம் செய்தால் நடவடிக்கை துப்பாக்கிச்சூடு உத்தரவில் உறுதியாக இருக்கிறேன் : அமைச்சர் சுரேஷ் அங்காடி விளக்கம்

பெலகாவி : கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவில் கடபிரபா-சிக்கோடி  இரட்டை ரயில் பாதை திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இதில் ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கலந்து கொண்டார். பின்னர், அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போரா ட்டம் என்ற பெயரில் ரயில்வேக்கு சொந்தமான பல கோடி  ரூபாய் சொத்துகள் நாசம் செய்யப்பட்டுள்ளது. இதைவேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.  ஆகவேதான், ரயில்வே சொத்துகளை யார் சேதப்படுத்த முயற்சித்தாலும் அவர்களை கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்று மாநில  அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

ரயில்வே போலீசார் (ஆர்பிஎப்)  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தும்  அதிகாரம் வழங்கப்படவில்லை. அதன் காரணமாகத்தான், ரயில் சந்திப்பு நிலையங்கள்,  பெரிய ரயில் நிலையங்களில் மாநில ேபாலீசாரை நியமனம் செய்துள்ளதுடன், ரயில்வே  போலீஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டம் என்ற பெயரில் அத்துமீறி  யார் ரயில்வே சொத்துகளை நாசப்படுத்தினாலும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு  நடத்தும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுத்து மூலமாக  எந்த மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பி வைக்கவில்லை. வாய்மொழி உத்தரவு  மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: