லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கூடுதல் எஸ்பி வீட்டில் 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானாவில் கூடுதல் எஸ்பி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 30 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நரசிம்ம ரெட்டி. இவர் வருமானத்திற்கு அதிகமாக  சொத்து சேர்த்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் ஐதராபாத், ரங்காரெட்டி,  சித்திப்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் நரசிம்ம ரெட்டிக்கு சொந்தமான  அலுவலகம், வீடு, உறவினர் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஐதராபாத்தில் ஒரு வீடு,  பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதும்,  சித்திப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் வாங்கி இருப்பதும், வருமானத்துக்கு அதிகமாக 30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: