ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழகம் - இமாச்சல் இன்று பலப்பரீட்சை : என்பிஆர் கல்லூரியில் தொடக்கம்

திண்டுக்கல்: தமிழகம் - இமாச்சலப் பிரதேசம் அணிகள் மோது ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.சமீபத்தில் தொடங்கிய ரஞ்சி கோப்பை 2019-20 சீசனில், தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணியிடம் 26 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்த நிலையில், தனது 2வது லீக் ஆட்டத்தில் அங்கித் கல்சி தலைமையிலான இமாச்சலப் பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தேவையில்லாமல் தோல்வியைத் தழுவியதால், விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனுபவ வீரர்கள் முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ஆர்.அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் இமாச்சல் அணியின் சவாலை முறியடிக்கலாம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் விளையாடிய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பியுள்ளது தமிழக அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அவருக்கு பதிலாக கே.முகுந்த் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகம்: விஜய் ஷங்கர் (கேப்டன்), ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாபா அபராஜித், முருகன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), அபினவ் முகுந்த், டி.நடராஜன், சாய் கிஷோர், ஷாருக் கான், மணிமாறன் சித்தார்த், அபிஷேக் தன்வார், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், வாஷிங்டன் சுந்தர். இமாச்சல்: அங்கித் கல்சி (கேப்டன்), சுமீத் வர்மா, கன்வர் அபினய், வைபவ் அரோரா, அங்குஷ் பெய்ன்ஸ், அங்குஷ் பேடி, பிரஷாந்த் சோப்ரா, மயாங்க் தாகர், ரிஷி தவான், நிகில் கங்தா, பங்கஜ் ஜெய்ஸ்வால், பிரியன்ஷு கந்துரி, பிரவீன் தாகூர், ஏகாந்த் சென், ஆகாஷ் வசிஷ்ட்.

Related Stories: