டெல்லியில் சர்வதேச கடத்தல் கும்பலிடம் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது

புதுடெல்லி: டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் அதிரடியில் ரூ.100 கோடி போதை பொருள் சிக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததும், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.  9 மாத கால தீவிர கண்காணிப்பின் மூலம், தற்போது ரூ.100 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சர்வதேச கடத்தல் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர், இளம்பெண் ஒருவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் மற்றும் 2 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். புத்தாண்டையொட்டி சர்வதேச கடத்தல் கும்பல் கோகைனை கடத்தி வந்து பிடிபட்டுள்ளனர். ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.1300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பிடிபட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை பொது இயக்குநர் எஸ்.கே.ஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: