அயோத்தி தீர்ப்பு மறுபரிசீலனை மனுக்கள் இன்று விசாரணை

புதுடெல்லி: அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 9ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட ராம் லாலா அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 18 மறுபரிசீலனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 9 மனுக்களை, இந்த வழக்குடன் ஏற்கனவே தொடர்புள்ளவர்களும், 9 மனுக்களை 3ம் நபர்களும் தாக்கல் செய்துள்ளனர். சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியதற்கு எதிராக அகில பாரத இந்து மகாசபா அமைப்பும் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்துள்ளது. உண்மை நிலவரம் மற்றும் சட்டப்படி இந்த தீர்ப்பு தவறானது என வரலாற்று அறிஞர் இர்பன் ஹபீப் உட்பட 40 பேர் சேர்ந்து தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் விசாரிக்கப்படவுள்ளது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திராசூட், அசோக்பூஷண், நசீர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று நீதிபதிகள் அறைக்குள் ரகசியமாக விசாரிக்கிறது.

உண்மை நிலவரம் மற்றும் சட்டப்படி இந்த தீர்ப்பு தவறானது என வரலாற்று அறிஞர் இர்பன் ஹபீப் உட்பட 40 பேர் சேர்ந்து தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் விசாரிக்கப்படவுள்ளது

Related Stories: