சுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்் பிடித்து இழுத்தனர்.முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி காலை மற்றும் இரவில் படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று சுவாமி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடந்தது. திருக்கார்த்திகையையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு 9 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது. நாளை(11ம் தேத) காலை படிச் சட்டத்தில் வீதியுலா நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு 8மணியளவில் கொடியிறக்கம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 8 மணியளவில் திருக்கார்த்திகை திருவிழா முடிந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related Stories: