ஐதராபாத் பெண் டாக்டர் டிசா வழக்கில் மண்ணில் புதைத்து வைத்த செல்போன் கண்டுபிடிப்பு: வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார்

திருமலை: ஐதராபாத் பெண் டாக்டர் டிசா வழக்கில் மண்ணில் புதைத்து வைத்த அவரது செல்போனை போலீசார் கண்டுபிடித்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐதராபாத் பெண் டாக்டர் டிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  கொலை வழக்கில் தெலங்கானா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநில காவல்துறை ஆணையாளர் சஞ்சனார் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்காக துணை ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் 4 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சட்டான்பள்ளி பாலத்தின் கீழ் டிசா உடலை எரிக்கப்பட்ட இடத்தில் கிடந்த தங்க கொலுசு, கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டை கண்டுபிடித்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் டிசா கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் 500 மீட்டர் தொலைவில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட செல்போனை நேற்று கண்டுபிடித்தனர். சேகரிக்கப்பட்ட தடயங்களை கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் விதமாக ஒருங்கிணைத்து விரைவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை விரைந்து முடி த்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: