மக்களை பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

சென்னை: மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறத்தியுள்ளார்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில இடங்களில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் ஆகியவற்றின் போக்குவரத்து தாமதமாகுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். மழையால் பல வீடுகள் இடிந்ததும், உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும். 24 மணி நேர சேவைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: