மேலவளவு படுகொலை வழக்கு ஆயுள் கைதிகள் 13 பேர் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு

மதுரை: மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

தற்போது, 13 பேரை விடுவித்த அரசாணையை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவை சேர்ந்த பாலசந்திரபோஸ் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் தமிழக அரசு 13 பேரை முன்கூட்டி விடுதலை செய்துள்ளது. எனவே, விடுவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், ஏற்கனவே நிலுவையிலுள்ள மனுவோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: