அமைச்சர்கள் நிலங்களை தொடாமல் வளைந்து செல்லும் மின்கோபுரங்கள்: ஈசன், உயர் மின்கோபுரம் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கோ, கொண்டு செல்வதற்கோ விவசாயிகள் எதிரி கிடையாது.  விவசாயிகள் வைக்கிற கோரிக்கையை எல்லாம் அமைச்சர்கள் திசை திருப்புகின்றனர். இப்போது மின்சார கேபிள் பூமிக்கடியில் கொண்டு செல்லும்  தொழில்நுட்பம் வந்து விட்டது. உதாரணமாக சென்னையை சுற்றி 110 கிலோ மீட்டருக்கு 400 கிலோ வாட் அளவுடைய கேபிள் பூமிக்கடியில் பதித்துள்ளனர்.  பவர்கிரீட் நிறுவனம் மதுரையில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இது, 400 கிலோவாட் கொண்ட திட்டம். இதில், கேபிள் மூலமாக மின்சாரத்தை கொடுக்கின்றனர். கொச்சியில் இருந்து குஜராத்  போர்பந்தர் வழியாக  1,100 கிலோ வாட் கொண்ட மின்சாரம் 3,500 கிலோ மீட்டர் தூரம் ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிபூட்டி என்கிற பகுதிக்கு  கடல் வழியாக தான் மின்சாரம் கொண்டு செல்கின்றனர்.  உள்நாட்டில் மின்சாரத்தை கடத்துவதால் 23 சதவீதம் இழப்பு ஏற்படுவதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின்சார இழப்பு வைத்து பார்க்கும் போது ஆண்டுக்கு ரூ.43 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.  கேபிள் போட்டால் 1 சதவீதம் தான் இழப்பு ஏற்படும்.

மின்சாரம் கடத்துவதால் 23 சதவீதம் இழப்பு ஏற்படுவதை சரி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தால் மின்சார இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல முதலீடு தான் அதிகம் என்றாலும், நீண்ட  காலம் பராமரிப்பு என்பது குறைவு. இதை தான் வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கரூர் கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் செயல்படுத்துகின்றனர்.  கேரளாவில் 177 உயர் மின் கோபுரம்  தான். 45 கி.மீட்டரில் கேபிள் தான் செல்கிறது. கேரளாவில் செய்யும் போது ஏன் தமிழகத்தில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது? எங்கள் மீது 32 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 42 பேர் சிறைக்கு சென்றுள்ளோம். ஒவ்வொரு  பகுதிகளிலும் போலீசார் உதவியுடன் வருவாய்த்துறை மூலம்  நிலத்தை பறிக்கின்றனர்.  இதுவே அமைச்சருக்கு சொந்தமான பகுதி, பினாமிகளின் நிலங்களில் எல்லாம் இந்த உயர் மின் கோபுரம் செல்வதில்லை. அங்கு மட்டும் வளைந்து நெளிந்து உயர்கோபுரம் செல்வது போன்று அமைக்கப்படுகிறது.

 எங்களுக்கு குறைந்த பட்ச இழப்பீடாவது தர வேண்டும். அதாவது உயர் மின் கோபுரம் அமைக்க ரூ.20 லட்சமாவது தர வேண்டும். கம்பி வழிதடத்துக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும். நாங்கள் ஏன் இப்படி கேட்கிறோம் என்றால், இந்த நிலத்தில்  உயர் மின் கோபுரம் அமைத்த பிறகு எங்களுக்கு நிலத்தின் மதிப்பு தான் குறையும். இந்த உயர் மின்சாரம் கோபுரம் அமைத்தால் அந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியாது. உலக சுகாதார நிறுவனம் தௌிவாக சொல்கிறது. 110 கிலோ வாட், 220 கிலோ வாட், 400 கிலோ வாட், 800 கிலோ வாட் இருக்கிறது. இதில், 800 கிலோ  வாட் கொண்ட உயர் மின்கோபுரம் இந்த பக்கம் 23 மீட்டர், அந்த பக்கம் 23 மீட்டர், 400 கிலோ வாட் கொண்ட உயர் மின்கோபுரம் இந்த பக்கம் 15 மீட்டர், அந்த பக்கம் 15 மீட்டர். இதற்கு காரிடர் ஏரியா என்று கூறுகின்றனர். இந்த பகுதிகளில்  விவசாயம் செய்ய தகுதி அற்ற பகுதி ஆகும். இந்த இடத்தில் விவசாயம் செய்தால் 18 வகையான நோய்கள் வரும். புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து உள்ளது. மின்காந்த அலையால் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.இதுவே அமைச்சருக்கு  சொந்தமான பகுதி, பினாமிகளின் நிலங்களில் எல்லாம் இந்த உயர் மின் கோபுரம் செல்வதில்லை. அங்கு மட்டும் வளைந்து நெளிந்து உயர்கோபுரம் செல்வது போன்று அமைக்கப்படுகிறது.

Related Stories: