தட்டி கேட்ட வழக்கறிஞரை தாக்க முயன்ற ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவுக்கு ரயில் பயணிகளிடம் டிப்ஸ் கேட்டு அடாவடி

சென்னை: ரயில் பயணிகளிடம் அடாவடியாக டிப்ஸ் கேட்ட ஊழியரை தட்டி கேட்ட வழக்கறிஞரை தாக்க முயன்றதால் சதாப்தி ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களான கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கும், அதேபோன்று திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளுக்கும் தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவையிலிருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் முன்பதிவு பெட்டியில் இருந்த பயணிகள் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

 அப்போது அந்த உணவை எடுத்து வந்து சப்ளை செய்த அலாம்(30) என்ற ஊழியர் உணவைக் கொடுத்து விட்டு பயணிகளிடம் டிப்ஸ் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதை ரயிலில் இருந்த வழக்கறிஞர் பிள்ளை ஏன் அடாவடியாக  பயணிகளிடம் பணம் கேட்கிறீர்கள் என்று அந்த ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.இதையடுத்து வழக்கறிஞரை தகாத வார்த்தையில் பேசியதால் ஊழியருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த உணவக சூப்பர்வைசர் நாராயணன் (32) சக ஊழியருடன் சேர்ந்து வழக்கறிஞரை தாக்க முற்சித்துள்ளார். இதையடுத்து, ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும் வழக்கறிஞர் பிள்ளை அங்கிருந்த ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு அந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: