தொடர்ச்சியாக 12வது வெற்றி விஜேந்தர் சிங் அசத்தல்

துபாய்: இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக 12வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். துபாய் புளூவாட்டர்ஸ் ‘சீசர்ஸ் பேலஸ்’ அரங்கில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் சார்லஸ் அடாமுவுடன் (42 வயது, கானா) மோதிய விஜேந்தர் (34 வயது) தனது அதிரடி தாக்குதலால் அடாமுவை நிலைகுலைய வைத்தார். விறுவிறுப்பான 8 சுற்றுகள் முடிவில் நடுவர்களின் ஒருமித்த முடிவில் வெற்றியை வசப்படுத்தினார். இது அவர் தொடர்ச்சியாக பெற்ற 12வது வெற்றியாகும்.

Related Stories: