சில்லி பாயின்ட்…

* பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று இந்திய வீரர் மெய்ரபா லுவாங் மய்ஸனம் 21-14, 22-20 என நேர் செட்களில் டென்மார்க் வீரர் மேட்ஸ் கிறிஸ்டோபர்சன்னை வீழ்த்தினார். தொடர்ந்து 50 நிமிடங்கள் நட்நத இந்த ஆட்டத்தின் வெற்றி மூலம் மெய்ரபா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். தகுதிச் சுற்று மூலம் தகுதிப் பெற்றவர் மெய்ரபா.

* நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சன்னே மீதான வன்புணர்ச்சி வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மல்யுத்தக்காரர்கள், போட்டிக்கு முன்னதாக உடல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் தகுதி முகாமை நடத்த வேண்டியது அவசியம். போட்டிக்கு 2 மாதங்களே உள்ள நிலையில் இனியாவது முகாமுக்கான ஏற்பாடுகளை கூட்டமபை்பு செய்ய வேண்டும்’ என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்ற விளையாட்டு அமைப்புகள் முகாம்களை ஏற்கனவே தகுதி முகாம்களை அறிவித்து விட்டன.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: