ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச நாட்கள் யாரும் பார்க்க முடியாது: விராட் கோலி பேட்டி

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர்களின் பட்டியலில் 661 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோஹ்லி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், கோஹ்லி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. விராட் கோஹ்லி 35 வயதை எட்டிவிட்ட சூழலில், ஓய்வு பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன.

இது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், “ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக, எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் கடந்த கால கிரிக்கெட் குறித்து சிந்திக்கவும் விருப்பமில்லை.

என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தமடைய கூடாது. ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால், கிரிக்கெட் களம் விட்டு வெளியேறினால், யாரும் என்னை கொஞ்ச நாட்கள் பார்க்கவே முடியாது. அதனால் களத்தில் இருக்கும் வரை, 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது’’ என்றார்.

The post ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச நாட்கள் யாரும் பார்க்க முடியாது: விராட் கோலி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: