வேலைவாய்ப்பின்மை பா.ஜனதா ஆட்சியில் ஒரு தொற்றுநோய்: பிரியங்கா காட்டம்

புதுடெல்லி: ‘ நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, பாஜ ஆட்சியில் உருவாகியுள்ள ஒரு தொற்றுநோய்,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாள்தோறும் நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், பாஜ அரசு குறித்தும் டிவிட்டரில் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நாட்டின் பொருளாதார நிலை குறித்து விமர்சித்து வந்த பிரியங்கா காந்தி, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் வேலைவாய்ப்பின்மை உருவாகி இருப்பது, நாட்டின் வளர்ச்சி என்ற சக்கரத்தை நிறுத்தவதற்கான  அறிகுறியாகும். இந்த நோயானது பாஜ ஆட்சியில் ஒரு தொற்றுநோயாக உருவாகி உள்ளது. கட்டுமான துறையில் 35 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள், 40 லட்சம் வேலை வாய்ப்புக்களை முடிவுக்கு கொண்டு வர உள்ளன,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: