மக்களவை தேர்தலில் 821 கோடி செலவு : காங்கிரஸ் கணக்கு தாக்கல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. அதோடு ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இவற்றில் செய்த செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி,  காங்கிரஸ் தேர்தல் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தேர்தல் காலத்தில் கட்சிக்கு ரூ.856.2 கோடி நிதி கிடைத்தது. இதில் தேர்தல் பிரசாரத்துக்காக ரூ.820.9 கோடி செலவிடப்பட்டது. பொது பிரசாரத்துக்காக ரூ.626.36 கோடியும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக ரூ.194 கோடியும் செலவழிக்கப்பட்டது. தற்போது, கட்சியிடம் ரூ.315.88 கோடி இருப்பு உள்ளது. இதில் ரூ.265 கோடி வங்கி கணக்கிலும், ரூ.50 கோடி ரொக்கமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ரூ.516 கோடி செலவு செய்தது. ஆளும் பா.ஜ கட்சி, தேர்தல் ஆணையத்திடம் இன்னும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.

Related Stories: