நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்: சிறைத்துறை அதிகாரிகள் சமரசம்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். 11வது நாளான நேற்று முன்தினம் ஜெயிலர் அல்லிராணி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார். அதேபோல் தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் தொடர்ந்து 21வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார்.

அவரிடம் மத்திய சிறை ஜெயிலர் ராஜேந்திரன் தொடர்ந்து நேற்று மாலை வரை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோர்ட் உத்தரவு படி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியுடன் நடக்கும் சந்திப்பை வரும் சனிக்கிழமை  ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதிக்கு தெரிவித்து பரிசீலனை செய்வதாக ஜெயிலர் தெரிவித்தார். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: