பாலக்காடு அருகே கொல்லப்பட்ட 2 மாவோயிஸ்ட் உடல்களை அடக்கம் செய்ய தடை : கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: 2 மாவோயிஸ்ட்  உடல்களை அடக்கம் செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மஞ்சங்கண்டி வனப்பகுதியில் கேரள அதிரடி படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், கார்த்தி உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் சந்தேகம் இருப்பதாகவும், உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் கூறி மணிவாசகத்தின் சகோதரி கலா பாலக்காடு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  தொடர்ந்து  கடந்த 4ம்தேதி வரை உடல்களை அடக்கம் செய்ய பாலக்காடு நீதிமன்றம்   தடை விதித்தது. 4ம்தேதி  இந்த மனுவை விசாரித்த பாலக்காடு நீதிமன்றம் மாவோயிஸ்ட் உடல்களை  அடக்கம் செய்ய  போலீசுக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், இதுதொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கார்த்தி, மணிவாசகத்தின் உடல்களை அடக்கம் செய்ய தடை விதித்துள்ளது.

Related Stories: