டெல்லி காற்று மாசு; மோடி ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை நடந்தது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் தீபாவளி கொண்டாட்டத்தினால் காற்றின் மாசு அளவு மேலும் அதிகரித்தது. இருப்பினும், இது கடந்த 3 ஆண்டுகளை விட இந்தாண்டு குறைவாக இருந்ததாக ஆய்வறிக்கைகள் செய்தி வெளியிட்டன.

இதனிடையே, பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே. மிஸ்‌ரா தலைமையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டம் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை டெல்லியில் நடந்தது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், டெல்லி, அதன்  சுற்றுப்புறங்களில் காற்றின் மாசு அளவு அதிகரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில்   டெல்லியில் நேற்று நடந்தது. மகா புயல் இன்று இரவு துவரகா-டையூ இடையே கரையைக் கடப்பதால், மகாராஷ்டிரா, குஜராத், டாமன் டையூ பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரால் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்  பிரதமர் ஆய்வு செய்தார், என்று கூறப்பட்டுள்ளது.

‘அறிவியல் ஆர்வத்தை தூண்டியது சந்திரயான்-2’

கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்திய சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, உலகில் எந்த நாடும் அறிவியல், தொழில்நுட்பம் இன்றி முன்னேறியது கிடையாது. அறிவியல் என்பது நூடுல்ஸ், பீட்சா போன்று உடனடியாக தயாரிப்பது அல்ல. அதற்கு பொறுமை வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகளில் உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த தலைமுறையினருக்கு கிடைக்கா விட்டாலும் எதிர்கால சந்ததியினருக்கு பலன் அளிக்கும். சந்திரயான்-2 திட்டமிட்டப்படி செயல்படுத்தப்பட்டது வெற்றியே. உலக அறிவியல் அரங்கில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சந்திரயான்-2ன் வெற்றி மாணவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது என்று பேசினார்.

Related Stories: