நாட்டு பசும்பாலில் தங்கம் உள்ளது : மேற்கு வங்க பாஜ தலைவர் பேச்சு

புர்த்வான்: நாட்டு பசுவின் பாலில் தங்கம் உள்ளதால் அதை அருந்தும் நமது உடல் ஆரோக்கியமாக திகழ்கிறது என மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில பாஜ தலைவரும் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். இந்த நிலையில் நேற்றும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு திலிப் கோஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில புத்திசாலிகள் மாடுகளின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஏன் நாய் இறைச்சியை சாப்பிடக்கூடாது. அவர்கள் எந்த இறைச்சியையும் சாப்பிடட்டும். அதை வீட்டில் வைத்து சாப்பிடுங்கள். ஏன் சாலைகளில் சாப்பிடுகிறீர்கள்?

பசுக்களை கொல்வது இந்தியாவில் குற்றமாக கருதப்படும் நிலையில் அதை ஏன் சாப்பிடுகிறார்கள். நாட்டு பசு மாடுகளின் பாலில் தங்கம் உள்ளது. இதனால் தான் அந்த பால் ெபான்னிறத்தில் தெரிகிறது. அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. அதேநேரத்தில் ஜெர்சி போன்ற வெளிநாட்டு பசுக்களின் பாலில் தங்கம் இருப்பதில்லை. அந்த பால் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருப்பதில்லை. நாட்டு பசுக்களை நாம் கோமாதாக்களாக கருதி வணங்குகிறோம். எனவே நம் தாயிடம் தவறாக நடந்து கொள்பவர்களை நடத்த வேண்டிய விதத்தில் நான் நடத்துவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: