மகளிர் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 53 ரன் வித்தியாசத்தில் வென்றது.நார்த் சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. பூனம் ராவுத் 77 ரன் (128 பந்து, 4 பவுண்டரி), கேப்டன் மித்தாலி ராஜ் 40, ஹர்மான்பிரீத் கவுர் 46 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.2 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷெமைன் கேம்ப்பெல் 39, கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 20 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி தலா 2 விக்கெட், ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.பூனம் ராவுத் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Stories: