டிக் டாக் செயல்பாடு அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: `டிக் டாக்’ செயலியை உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டிக் டாக்கின் தணிக்கை, தரவு சேகரிப்பு ஆகியவை கவலை அளிப்பதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து, அமெரிக்க நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அந்நிய முதலீடு தொடர்பான கமிட்டி, டிக் டாக்கின் பாதுகாப்பு தன்மை குறித்த விசாரணையை தொடங்கி உள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து நிதி அமைச்சகத்தின் தரப்பில் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. ஆனால், `அமெரிக்க பயனாளர்கள், விசாரணை அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதற்கே  முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போதைய கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது,’ என்று டிக் டாக் செயலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: