கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். செய்பெர்ட் 32, கோலின் மன்றோ 21, கிராண்ட்ஹோம் 19 ரன் எடுக்க, கப்தில் 2 ரன்னில் வெளியேறினார். டாரில் மிட்செல் 30 ரன், சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.