நெல்லையில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் பஸ் டெப்போவாக மாறிய வண்ணார்பேட்டை மேம்பாலம்

நெல்லை: தீபாவளி பண்டிகைக்காக நெல்லையில் கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் இன்று மீண்டும் சென்னை உள்ளிட்ட  இடங்களுக்கு மீண்டும் இயக்கப்படுகின்றன. இதற்காக வந்த கூடுதல் பஸ்கள், நிறுத்த இடம் இல்லாததால் வண்ணார்பேட்டை மேம்பாலம் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டதால் தற்காலிக பஸ்டெப்போ போல் காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதற்காக தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் எண்ட் டூ எண்ட், பாயிண் டூ பாயிண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ், ஒன்டூதிரி சேவை போன்ற பஸ்களும் தீபாவளிக்காக சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ்களும் அதிக அளவில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றும் (அக்.28) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் தீபாவளிக்காக இன்று ஒருநாள் கூடுதலாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்திருந் தனர். இவர்கள் இன்று தங்களது பணி செய்யும் இடங்களுக்கு திரும்புகிறார்கள். இதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பஸ்களுக்கு வண்ணார் பேட்டையில் உள்ள விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் போதிய இடவசதி இல்லை. இதையடுத்து கூடுதல் பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழ்பகுதியில் பக்கவாட்டு சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதி தற்காலிக பணிமனைபோல் காட்சி அளித்தன.

Related Stories: