பளு தூக்குதலில் சாம்பியன் தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: பீகார் மாநிலம் கயாவில் தேசிய அளவிலான 15வது இளம் வீரர்களுக்கான, 32வது ஜூனியர் பெண்களுக்கான, 56வது ஆண்களுக்கான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 17 வீரர்கள், 12 வீராங்கனைகள் பங்கேற்றனர்.இளம் வீரர்களுக்கான 89 கிலோ எடை பிரிவில் லோக்சந்த், 102 கிலோ எடை பிரிவில் ருத்ரமாயன் ஆகியோர் தங்கம் வென்றனர்.  81 கிலோ பிரிவில் அருள் பாண்டியன், 96 கிலோ பிரிவில் ராம்குமார் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை ஈட்டினர். மேலும், 49 கிலோ  பிரிவில் பாலாஜி, 55 கிலோ பிரிவில் மாதவன் ஆகியோர் வெண்கலம் பெற்றனர். அதுபோல், ஜூனியர் வீராங்கனைகளுக்கான 64 கிலோ எடை பிரிவில் பூர்ணா, 71 கிலோ எடை பிரிவில் லேகா மால்யாஆகியோர் தங்கம் வென்றனர்.

மேலும், 59 கிலோ பிரிவில் தேவதர்ஷினி வெள்ளிப் பதக்கம், 76 கிலோ பிரிவில் ரூபவர்ஷினி, 81 கிலோ பிரிவில் மோகனபிரியா ஆகியோர் வெண்கலம் பெற்றனர். இப்படி இளம் வீரர் கள், ஜூனியர் வீராங்கனைகள் பிரிவில் அதிக  பதக்கங்களை வென்ற தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு மாநில பளு தூக்குதல் சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: