வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டி20 போட்டி நவம்பர் 1ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.