ஆரணியில் டிஎஸ்பி முன்னிலையில் பயிரிடப்பட்ட நிலத்தை உழுத விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை : ஆரணியில் டிஎஸ்பி முன்னிலையில் பயிரிடப்பட்ட நிலத்தை உழுத விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி, சாவித்திரி இடையேயான நிலத் தகராறில் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்ததாக தமிழக அரசு மீது புகார் கூறப்பட்டது. புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. மேலும்  டிஎஸ்பி ஜெரினா பேகம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரணியில் டிஎஸ்பி முன்னிலையில் பயிரிடப்பட்ட நிலத்தை உழுத விவகாரம்

ஆரணி அடுத்துள்ள காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி. அந்த கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பாக சாவித்திரிக்கும் அவரது உறவினர் சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதற்கிடையில், ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் முன்னிலையில் விவசாய நிலத்தில் வளர்ந்திருந்த நெற்பயிரை அத்துமீறி நபர் ஒருவர் டிராக்டரை ஓட்டி சேதப்படுத்தினர். இந்த செயலின் போது அங்கு விசாரணையில் இருந்த டிஎஸ்பி ஜெரினா பேகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவினஇந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நீதிபதியும் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதியுமான மகிழேந்தி நேரில் விசாரணை செய்தார். பின்னர், ஜெரினா பேகத்தை வேறு உட்கோட்டத்துக்கு இடமாறுதல் செய்யுமாறு, வேலூர் சரக டிஐஜி வனிதாவுக்கு கடந்த ஆண்டு நீதிபதி மகிழேந்தி பரிந்துரை செய்திருந்தார்.

Related Stories: