திண்டிவனத்தில் லேசான மழைக்கே விழுந்த புளியமரம்: இரவு முழுவதும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நேற்று இரவு பெய்த லேசான மழையினால் சாலையேரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்தது. இரவு முழுவதும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் நேற்று காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில் திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் ஓம்சக்தி கோயில் எதிரே சாலை ஓரத்தில் உள்ள மிகப் பெரிய புளியமரம் சாலையில் முறிந்து விழுந்தது. புளியமரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertising
Advertising

காலை நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் புளிய மரம் விழுந்த இடத்தில்  எதிரே வரும் வாகனங்கள் சென்றபின் செஞ்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் காத்திருந்து செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியது. ஆகையால் சாலையில் இருந்த புளிய மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: