பஞ்சாப் காங்.கிடம் இருந்து இன உணர்வை தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்: ராமதாஸ் டிவிட்டர் பதிவு

சென்னை: 7  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை  தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது.பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது.

இன உணர்வு என்றால் என்ன என்பதை  பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும். ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், புதிதாக தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அறிவிப்பு வெளியாகி 5  ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு நிதி ஒதுக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

Related Stories: