மாமல்லபுரத்தை வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தை வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய பிரதமர், சீன அதிபர் சந்திப்பானது இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பாகும். இதன் விளைவாக மகாபலிபுரத்தில் உள்ள கலை சிற்பங்களும், புராணங்களின் எழுத்துக்களும் புதுபித்து, “தூய்மை  இந்தியா” என்கிற திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு ஏற்ப சென்னை விமான நிலையம் முதல் கிண்டி, இசிஆர், ஓஎம்ஆர், மகாபலிபுரம் வரை வெளிநாட்டுக்கு இணையாக மிகசுத்தமாக  மாற்றியிருக்கிறார்கள்.

 இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாவிற்கு வருகைதரும் மக்களும், சுத்தத்தை பேணிக்காத்து, மகாபலிபுரத்தை உலகின் மிகச் சிறந்த சுற்றுலா  தலமாக மாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மகாபலிபுரத்தை இன்று போல் என்றும் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருடைய கடமையாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, இந்த இடத்தை மிக முக்கிய  சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.

Related Stories: