தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்: நாங்குநேரியில் முதல்வர் பழனிசாமி பேச்சு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.200 கோடி முதலீட்டில் பச்சையாறு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். பச்சையாறு திட்டத்தின் மூலம் 46 குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரப்படும். 5 லட்சம் பேருக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதால் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். நல்லது செய்வதற்காக அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: