தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

2024-25-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகல்வித்துறையின் கீழ் தொடக்ககல்வியில் 31,336 பள்ளிகளும், பள்ளிகல்விதுறை இயக்குநரகத்தின் கீழ் 6,029 உயர்நிலைபள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பொதுவாக ஜூன் மாதம் 1-ம் தேதி கல்வியாண்டு தொடக்கத்தில் நடைபெறும். இந்த நிலையில் தனியார்பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் முன்னெடுக்க கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மாணவர்களுக்கு தெரியபடுத்தி மாணவர் சேர்க்கையை ஒரு திருவிழாவாக நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்தது. அதற்கான சுற்றறிக்கை அனுப்பபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மிககுறிபாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்க கூடிய காலைஉணவுதிட்டம், சீருடை, உயர்கல்விக்கான வாய்ப்புகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்படுகிறது. இதனை மக்களிடையே கொண்டு சென்று மாணவர் சேர்க்கையை அதிகபடுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டது. அதன்படி மார்ச் 1-ம் தேதி மாணவர் சேர்க்கை திருவிழா என்பது தொடங்கபட்டது.

மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள்ளாக மாணவர் சேர்க்கையை 3 லட்சமாக இலக்கை எட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 3லட்சத்து 29 மாணவர்கள் சேர்ந்ததாக பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறகூடிய நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதற்குள்ளாகவே சுமார் 3.24 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக பள்ளிகல்விதுறை தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: